நம்பர் 1 கிரீடத்தை இழந்த ரவி பிஷ்னோய், சுப்மான் கில். பாபர் அசாம் மீண்டும் முதலிடம்…!
ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சுப்மான் கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட ஒருநாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளி பட்டியலில் 824 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 775 புள்ளிகளுடனும் மூன்றாவது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் நான்காவது இடங்களில் உள்ளார். டி20 பந்துவீச்சு பிரிவில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 715 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையைப் பற்றி பேசுகையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் ஒருநாள் தரவரிசையில் தலா ஒரு இடத்தை இழந்துள்ளனர். பும்ரா ஐந்தாவது இடத்திலும், குல்தீப் எட்டாவது இடத்திலும் உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 715 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜோஷ் ஹேசில்வுட் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் முகமது சிராஜ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் டி20 தரவரிசையில் நம்பர்-1 இடத்தை இழந்துள்ளார். இங்கிலாந்தின் அடில் ரஷித் மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். பிஷ்னோய் தற்போது இரண்டு இடங்கள் சரிந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (692) 2வது இடத்தில் உள்ளார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க (679) நான்காவது இடத்திலும், மகேஷ் தீக்ஷனா (670) முதல் 5 இடங்களிலும் நீடிக்கிறார்கள்.