“அதிகமான எடை” நீக்கிய மும்பை நிர்வாகம்! பிரித்வி ஷா போட்ட பதிவு?
ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து பிரித்வி ஷா போட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை : வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவர் இந்த முறை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதில் முதல் காரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய ஃபார்ம் தான்.
நீக்கப்பட்ட காரணம்?
சமீபகாலமாக அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய வகையில் உள்ளது. அதைப்போல, பிரித்வி ஷா உடல் எடையும் வயதை மீறிய அளவுக்கு உள்ளதால் அவரால் சரியாக ஓடி ரன்கள் எடுக்க முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதைப்போல, பயிற்சி நேரத்தில் பயிற்சி செய்யாமல் உடல் எடை காரணமாக மெத்தனம் காட்டியுள்ளார். இது அணி நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்திய நிலையில், இதன் காரணமாக தான் மும்பை அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் பிரித்வி ஷாவை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
பிரித்வி ஷா போட்ட பதிவு?
மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை 4 வார்த்தையில் எழுதி வெளியீட்டு இருக்கிறார். அதில் “ஒரு இடைவெளி தேவை, நன்றி” என கூறியுள்ளார். இவருடைய பதிவை பார்த்த பலரும் அணி தன்னை நீக்கியதற்கு நக்கலான தோரணையில் இந்த பதிவை அவர் போட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.
ஒரு வேளை அவர் அப்படி அந்த தோரணையில் பதிவு போட்டு இருக்கிறாரா? அல்லது இந்த ஓய்வு இந்த நேரத்தில் தேவை கண்டிப்பாக இந்த ஓய்வு காலத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து களத்திற்கு திரும்பி கம்பேக் கொடுக்க இப்படி போட்டு இருக்கிறாரா என்பது அவருக்கு தான் தெரியும். எனவே, அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மும்பை அணி
- அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி , அகில் ஹெர்வாட்கர் , ஷ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யான்ஷ் ஷெட்ஜ் , ஹர்திக் தாமோர் (WK), சித்தான்த் தாதாத்ராவ் (WK), ஷம்ஸ் முலானி , ஷர்துல் கோத்தாரி, கர்ஷுல் கோத்தாரி , ஜூன்ட் கான், ராய்ஸ்டன் டயஸ் .