மழை எதிரொலி : INDvNZ டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க இருந்த இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் : இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே சமயம், நேற்றிலிருந்தே பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சின்ன சாமி மைதானத்தில் நீரும் தேங்கியது.
இருப்பினும், போட்டி அடுத்த நாள் 9.30 மணிக்குத் தான் தொடங்கும் என்பதால் மழை நின்று போட்டி தொடங்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த அனைவர்க்கும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக மழை நிற்காமல் பெய்தது. எனவே, மதியம் 2 மணிக்குப் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த சமயமும் மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. மற்றொரு பக்கம் மைதானத்தில் தண்ணீர் எடுக்கும் வேலைகளும் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எனவே, மழை நிற்கும் போட்டி ஆரம்பித்துவிடலாம் என்று நடுவர்கள் நினைத்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக மழை நிற்கவில்லை.
எனவே, போட்டி தொடங்கும் நேரமும் முடிந்து இனிமேல் போட்டி நடத்தினால் சரியாக இருக்காது என்பதால் வேறு வழியில்லாமல் மழைகாரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை மழை பெய்யாமல் வானிலை நன்றாக இருந்தால் போட்டி டாஸ் போட்டு போட்டி தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் முதல் நாளில் 80 ஓவர்களுக்கும் மேல் நடைபெறாமல் இருக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு நாளை 2- ஆம் நாளில் வழக்கமாக போட்டி தொடங்கும் நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்பும், அதே போல வழக்கமாக போட்டி முடியும் நேரத்தை விட 15 நிமிடங்கள் அதிகமாகவும் போட்டி நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.