இந்தியா கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி நாளை ஜனவரி 10-ஆம் தேதி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் தற்போது பயிற்சி செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். விராட் கோலி கடைசியாக கடந்த 2022 -ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார்.
அதன்பிறகு நடைபெற்ற எந்த டி20 போட்டிகளிலும் அவரும் விளையாடவில்லை ரோஹித் ஷர்மாவும் விளையாடவில்லை. இதனையடுத்து, நீண்ட மாதங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. எனவே, விராட் கோலி ரசிகர்கள் பலரும் விராட் கோலி ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்.
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
இந்த சமயத்தில் திடீரென தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் போட்டியில் மட்டும் விளையாடமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. விராட் கோலி அடுத்ததாக 14-ஆம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள்
இந்தியா
ஆப்கானிஸ்தான்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…