ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விலகிய விராட் கோலி!

Virat Kohli

இந்தியா கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி நாளை ஜனவரி 10-ஆம் தேதி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  இந்த போட்டியில் விளையாட இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் தற்போது பயிற்சி செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். விராட் கோலி கடைசியாக கடந்த 2022 -ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார்.

அதன்பிறகு நடைபெற்ற எந்த டி20 போட்டிகளிலும் அவரும் விளையாடவில்லை ரோஹித் ஷர்மாவும் விளையாடவில்லை. இதனையடுத்து, நீண்ட மாதங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. எனவே, விராட் கோலி ரசிகர்கள் பலரும் விராட் கோலி ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்.

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

இந்த சமயத்தில் திடீரென தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் போட்டியில் மட்டும் விளையாடமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. விராட் கோலி அடுத்ததாக 14-ஆம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் 

இந்தியா 

  • ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி. பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

  • இப்ராஹிம் சத்ரான் (கேப்டன் ), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனாத், அஸ்மாயுல்லா, அஸ்மாயுல்லா , முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், முகமது சலீம், கைஸ் அஹ்மத், குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்