தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் – ரஹானே.!

Default Image

அஜின்கியா ரஹானே (வயது 31) இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். இவர் 3 வகையான போட்டிகளில் விளையாடினாலும், தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். இருபது டி20, 90 ஒருநாள் மற்றும் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்குபோதெலாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை காப்பாற்றியுள்ளார். பொதுவாக சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடக் கூடியவர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் குறித்து ரசிகர்களிடையே இணையத்தில் பேசியுள்ளார். 2014ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 103 ரன்கள் விளாசியது, 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் அடித்தது தனக்கு சிறப்பாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் ரகானே 154 பந்தில் 103 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் இந்தியா ஒரு கட்டத்தில் திணறியபோது, ரகானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தார். இதனால் அணி சரிவில் இருந்து மீண்டது. பின்னர் 2வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீச இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. இதில் தவான் 137 ரன்கள் அடித்த போதிலும், ரகானே 60 பந்தில் 79 ரன்கள் விளாசினார். இதனால் தவான் – ரகானே ஜோடி 125 ரன்கள் குவித்தது. பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 177 ரன்னில் தோல்வியை தழுவியது. இவ்விரு ஆட்டங்களுமே தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்சாக இருந்தது என்று ரசிகர்களிடையே விவரித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்