டென்னிஸில் ரஃபேல் நடால் ஓய்வு? விளக்கமளித்த நடால்!

Published by
அகில் R

ரஃபேல் நடால் : டென்னிஸில் நம்பர் 1 வீரராக திகழ்ந்த ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவுடன் அவரது ஓய்வு குறித்த விளக்கத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தார்.

நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் தொடரானது கடந்த மே-26ம் தேதி அன்று பாரிஸ்ஸில் உள்ள ஸ்டேட் ரொலாண்ட் கரோஸ் மைதானத்தில் தொடங்கியது.  இந்த தொடரில் மே-27ம் தேதி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் முதலில் இருந்தே சிறப்பாக ஆதிக்கம் செலுத்தி விளையாடினார் அலெக்சாண்டர், ரஃபேல் நடால் கடுமையாக நெருக்கடி கொடுத்தும் அலெக்சாண்டர் அந்த போட்டியை 3-6, 6-7, 3-6 என நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த தோல்வியின் மூலம் ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

மேலும், இந்த பிரெஞ்சு ஓபன் தொடர் தான் அவரது கடைசி தொடர் எனவும் இதன் பிறகு அவர் ஓய்வு பெறுவார் எனவும் அவரது ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு ரஃபேல் நடால் தனது ஓய்வு குறித்து பேசி இருந்தார். இவர் பேசிய போது, “இங்கு நான் விளையாடியது தான் எனது கடைசி போட்டியா? என்று எனக்கு தெரியவில்லை. என்னால் 100% சதவீதம் அதை இப்போது கூற முடியவில்லை.

ஒருவேளை இதுதான் என் கடைசி போட்டி என்றால், அதை முழுக்க முழுக்க அனுபவித்து விளையாடி இருக்கிறேன். மேலும், இன்று எனது இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க கஷ்டமாக இருக்கிறது. இதே மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட நான் மீண்டும் வருவேன் என நம்புகிறேன். அது மட்டும் தான் எனக்கு இப்பொது உத்வேகம் அளிக்கிறது. அதற்காக நான் முழுமையாக என்ன தயார்ப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என கூறி இருந்தார்.

இதன் மூலம், ரஃபேல் நடால் அவரது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் அவரது ரசிகர்களுக்கும் ஆறுதல் அளித்துள்ளார். இவர் 14 முறை பிரெஞ்சு தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், 22 முறை கிராண்ட்ஸ்லாம் (Grand Slam) தொடரையும் கைப்பற்றி ஒரு காலத்தில் நம்பர் 1 டென்னிஸ் வீரராக கோடி கட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

We love you too Rafa, and we hope to see you again next year ????#RolandGarros pic.twitter.com/7hX4Gw46WE

Published by
அகில் R

Recent Posts

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

13 minutes ago

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

38 minutes ago

“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

59 minutes ago

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

8 hours ago

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

9 hours ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

10 hours ago