தகுதி சுற்று போட்டி: மேரிகோம்-நிகாத் ஜரீன் மோதல்.! இந்திய அணியில் இடம்பெற போவது யார்..?

Published by
murugan
  • வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது.
  • அதற்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்ய  வேண்டும் என டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெறுகிறது.

வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்வது என்பதற்காக டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெறுகிறது.

இந்த  2 நாள் தகுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஜூனியர் உலக சாம்பியனான  நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை வீழ்த்தி நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி நிகாத் ஜரீன் வெற்றி பெற்றார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற  மேரிகோம் , ரிது கிரிவாலை வீழ்த்தினார். தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீன்  இருவரும் இன்று மோத உள்ளனர்.இன்று வெற்றி பெறும் வீராங்கனை  இந்திய அணியில் இடம் பெறுவார்கள்.

மேரிகோமை நேரடியாக தகுதி சுற்றுக்கு தேர்வு செய்யக்கூடாது அவரை என்னுடன் மோத வைக்க வேண்டும் எனபல முறை நிகாத் ஜரீன் அடிக்கடி வலியுறுத்தி வந்த நிலையில் இன்று இருவரும் மோத உள்ளனர்.

இது குறித்து நிகாத் ஜரீன் கூறுகையில், “மேரிகோமை எதிர்த்து மோத வேண்டும் என்ற நீண்ட கால விருப்பம் இன்று  நிறைவேற போகிறது. எனது முழு  திறமையை வெளிப்படுத்தி இந்த போட்டியை  மறக்க முடியாத போட்டியாக மாற்ற முயற்சிப்பேன்” என கூறினார்.

Published by
murugan

Recent Posts

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…

16 minutes ago

“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன?

சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…

1 hour ago

“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!

விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…

2 hours ago

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…

2 hours ago

பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…

3 hours ago

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…

4 hours ago