கத்தார் தான் கடைசி..அடுத்த உலகக் கோப்பைக்கு நான் செல்லமாட்டேன்..! லியோனல் மெஸ்ஸி..
கத்தார் உலகக் கோப்பை தான் கடைசியாக விளையாடும் போட்டி என்று அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை பிபா உலக கோப்பை போட்டி நடைபெற்றது இதில் பிரான்ஸ் அனியை லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வென்றது.
இதனையடுத்து, ஜூன் 15ம் தேதி அதாவது நாளை, பெய்ஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அர்ஜென்டினாவின் நட்புரீதியான ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, சீன செய்தியாளர்களுக்கு மெஸ்ஸி அளித்த பேட்டியில் கத்தார் உலகக் கோப்பை தான் நான் விளையாடும் போட்டி என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், 2022ம் ஆண்டு நடந்த காத்தாரில் நடந்த உலகக் கோப்பை தான் தனது கடைசிப் போட்டி என்றும், 2026ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பைக்கு தான் செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில், லியோனல் மெஸ்ஸியின், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியானது. அதனை உறுதி செய்யும் விதமாக இன்டர் மியாமி கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றையும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.