#Factcheck: பேட்மிட்டன் தொடரில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த பி.வி.சிந்து??
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஓய்வு பெறுவதாக வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல.
இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களை என்ற சாதனையை படைத்தார். 25 வயதே ஆகும் அவர், டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வந்தது. அதற்க்கு காரணம், தனது ட்விட்டர் பதிவில் உள்ள முதல் பக்கம்.
அந்த பதிவை பார்த்த சிலர், டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடருடன் பி.வி.சிந்து ஓய்வு பெறப்போகிறார் என தெரிவித்து பல தகவல்கள் வெளியானது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல. அவர் விடுத்துள்ள அந்த அறிக்கையில், கொரோனா அச்சத்தில் இருந்து மட்டுமே விலகுவதாகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவே “ஓய்வு” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
???? pic.twitter.com/W7uw2IvF4S
— Pvsindhu (@Pvsindhu1) November 2, 2020
அண்மையில் நடைபெற்ற “டென்மார்க்” தொடரில் பி.வி. சிந்து பங்கேற்காத நிலையில், இந்த அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அடுத்த நடைபெறவுள்ள ஆசியா தொடரில் பங்கேற்கவுள்ளதாலாவும், அந்த தொடரில் எனது தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என தெரிவித்துள்ளார்.