இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் அரையிறுதி போட்டியில்,உலகின் நம்பர் 1 வீராங்கனை தாய் சூ-யிங்கிடம்,பிவி சிந்து தோல்வியுற்றார்.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
வெறும் 41 நிமிடங்களில்:
அதன்படி,முன்னதாக நடைபெற்ற பேட்மிண்டன் 16 வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வெறும் 41 நிமிடங்களில் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் 2020 காலிறுதிப் போட்டிக்கு பிவி சிந்து தகுதி பெற்றார்.
தொடர் வெற்றி:
இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.இதனால்,இந்தியாவுக்கு இன்று வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது.
வெண்கலப்பதக்கம்:
இந்நிலையில்,இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,பிவி சிந்து ,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீன தைபேயின் தாய் சூ-யிங்கை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,18-21, 12-21 என்ற கணக்கில் தாய் சூ-யிங்கிடம் தோற்றார்.இதனால்,நாளை வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பென்னை எதிர்கொள்ளவுள்ளார்.
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…