பிவி சிந்துவின் ஆலோசனை பயிற்சியாளரானார் லீ ஹியூன் ! வெற்றிப் பயணம் தொடருமா?

இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது ஆலோசனை பயிற்சியாளராக தென்கொரியா வீரரை நியமித்துள்ளார்.

PV Sindhu - Lee Hyun-il

சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் தற்போது தென் கொரியா வீரரான லீ ஹியூன் எனும் வீரரை ஆலோசனைப் பயிற்சியாளராக பிவி சிந்து நியமித்துள்ளார்.

இவர் பிவி சிந்துவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீதருடன் இணைந்து வரவிருக்கும் போட்டிகளில் பணியாற்ற உள்ளார். நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடருக்கு பிறகு பிவி சிந்து மீண்டும் அக்டோபரில் பின்லாந்து நாட்டில் நடைபெறும் ஆர்க்டிக் ஓபன் தொடரில் களமிறங்கவுள்ளார்.

இந்தத் தொடரில் அவர்கள் இருவரும்  பிவி சிந்துவின் பயிற்சியாளாராக இருப்பார்கள். மேலும், இந்த ஆண்டு இறுதி வரை அதாவது டிசம்பர் வரை இருவருமே தற்காலிக பயிற்சியாளராகவே இருப்பார்கள் எனவும் டிசம்பரில் அடுத்த கட்டமாக நிரந்தர பயிற்சியாளரை குறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயிற்சியாளர் நியமனம் குறித்து சமீபத்தில் பிவி சிந்து பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார். அதில், “இந்த முக்கியமான காலகட்டத்தில் என் அணியில் அனுப் ஸ்ரீதர் மற்றும் லீ ஹியூன் இல் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பேட்மிண்டனைப் பற்றிய அனுபின் புரிதலும் அவரது யுக்தி சார்ந்த அணுகுமுறையும் என்னை கவர்ந்தன, மேலும் இருவருடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்”, என பிவி சிந்து கூறியிருந்தார்.

மேலும், இது குறித்து தற்காலிக ஆலோசனை பயிற்சியாளராக லீ ஹியூன் கூறுகையில், “பிவி சிந்துவுடன் பணிபுரிவது எளிதான முடிவு தான். இதற்கு முன் PBL இல் தொடரில் எங்களின் முந்தைய கூட்டாண்மை அவரது கடுமையான உறுதியையும் விதிவிலக்கான திறமையையும் எடுத்துக்காட்டியது. வரவிருக்கும் போட்டிகளில் அவரது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்களிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”, என லீ ஹியூன் பேசியிருந்தார்.

இதில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிவி சிந்துவின் பயிற்சியாளரான அனுப் ஸ்ரீதர், சிந்துவின் 8-வது பயிற்சியாளராகவும் மற்றும் அதுவும் 3-வது இந்திய பயிற்சியாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அடுத்தடுத்து நடைபெற இருக்கும் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்துவின் புதிய விளையாட்டை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt