பிவி சிந்துக்கு டும்..டும்..டும்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் : இந்தியாவுக்காக 2016, 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பிவி சிந்து இப்போது தன்னுடைய வாழ்வில் அடுத்தகட்ட முடிவான திருமண முடிவை எடுத்துள்ளார். அதன்படி, அவர் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் வெங்கட தத்தா சாயியை ராஜஸ்தானின் உதய்பூரில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வெங்கட தத்தா சாய் யார்?
பிவி சிந்து திருமணம் செய்துகொள்ளப்போகும் வெங்கடா தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஜிடி வெங்கடேஷ்வர் ராவின் மகன் தான். இவர் தற்போது டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் தற்போது நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
ஃபிளேம் யுனிவர்சிட்டி இளங்கலை வணிக நிர்வாகத்தில் கணக்கியல் மற்றும் நிதித்துறையில் பிபிஏ பட்டமும், பெங்களூரில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங்கில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
திருமணம் எப்போது?
பிவி சிந்துவுக்கும் வெங்கடா தத்தா சாய்க்கும் வரும் டிசம்பர் 22ஆம் தேதி உதய்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணம் குறித்து சிந்துவின் தந்தை பி.வி. ரமணா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” இரு குடும்பத்தினருக்கும் ஒருவரையொருவர் தெரியும், ஆனால் திருமணம் நவம்பரில் முடிவு செய்யப்பட்டது.வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார். பிவி சிந்து திருமண செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.