இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, துபாயில் நடைபெற்றுவரும் நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய மந்தீப் சிங் 17 எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து இறங்கிய கிறிஸ் கெயில் 20 ரன்கள் அடித்த விக்கெட்டை இழந்தார்.
பின்னர், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே எல் ராகுல் 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன் கடைசி வரை களத்தில் நின்று 32* ரன்கள் குவித்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இப்போட்டியில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 127 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கயுள்ளது.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…