இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு..!
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபவர் பி.டி.உஷா. இவர் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும் நாட்டின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளையும் பெற்றுள்ளார்.
சமீப நாட்களுக்கு முன் இவர் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியிட வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தினால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.