உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினாவின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி அவர் விளையாடி வரும் கிளப்பான பிஎஸ்ஜி க்கு விளையாட இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்பின் முன்கள வீரரான லியோனல் மெஸ்ஸி சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாட்கள் அவரது தனிப்பட்ட பயணத்திற்குப்பிறகு இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று பிரெஞ்சு விளையாட்டு நாளிதழான எல்’ஈக்விப் தெரிவித்துள்ளது.
2021 இல், அவர் பார்சிலோனாவை விட்டு வெளியேறிய பின்னர் பிஎஸ்ஜி க்காக விளையாடி வருகிறார்.இந்த ஒப்பந்தம் வரும் ஜூன் மாத இறுதியில் காலாவதியாகிறது,இதனால் அவர் வேறொரு கிளப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
மெஸ்ஸி சவூதி அரேபியாவின் சுற்றுலாத் தூதராக இருப்பதால் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.சவுதி புரோ லீக்கில் விளையாட 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் தொடர்பாக சவுதி அரேபிய அணியான அல்-ஹிலால் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் உறுதியானால் மெஸ்ஸியின் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாசருக்கு சென்றபோது அவருக்கு வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு தொகை அதிகமாக இருக்கும்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…