மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்த பிஎஸ்ஜி;சவூதி கிளப்புடன் 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ?

Lionel Messi PSG

உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினாவின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி அவர் விளையாடி வரும் கிளப்பான பிஎஸ்ஜி க்கு  விளையாட இரண்டு வாரங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்பின்  முன்கள வீரரான லியோனல் மெஸ்ஸி சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாட்கள் அவரது தனிப்பட்ட  பயணத்திற்குப்பிறகு இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று பிரெஞ்சு விளையாட்டு நாளிதழான எல்’ஈக்விப் தெரிவித்துள்ளது.

2021 இல், அவர் பார்சிலோனாவை விட்டு வெளியேறிய பின்னர் பிஎஸ்ஜி க்காக விளையாடி வருகிறார்.இந்த ஒப்பந்தம் வரும் ஜூன் மாத இறுதியில் காலாவதியாகிறது,இதனால் அவர் வேறொரு கிளப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸி சவூதி அரேபியாவின் சுற்றுலாத் தூதராக இருப்பதால் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.சவுதி புரோ லீக்கில் விளையாட 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் தொடர்பாக சவுதி அரேபிய அணியான அல்-ஹிலால் உடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் உறுதியானால் மெஸ்ஸியின் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாசருக்கு சென்றபோது அவருக்கு வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு தொகை அதிகமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்