இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவு லீக் போட்டியில் மும்பை அணியும் , பரோடா அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய பரோடா அணி முதல்இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 4 விக்கெட்டை இழந்து 409 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் பிரித்வி ஷா இரட்டை சதம் விளாசினார். பிரித்வி ஷா 179 பந்திற்கு 202 ரன்கள் குவித்தார்.அதில் 19 பவுண்டரி , 7சிக்ஸர் அடங்கும். இதனால் பரோடா அணிக்கு , மும்பை அணி 534 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதை தொடர்ந்து இறங்கிய பரோடா அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்தனர்.இதை தொடர்ந்து இன்று விளையாடிய பரோடா அணி224 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனால் இப்போட்டியில் மும்பை அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையின் 20 வயதான தொடக்க வீரர் பிருத்வி ஷா ரஞ்சி டிராபி வரலாற்றில் மூன்றாவது அதிவேகமாக இரட்டை சதத்தை அடித்து உள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரஞ்சிக்கோப்பை தொடரில் (123 பந்தில் இரட்டைசதம் அடித்து சாதனையைப் படைத்துள்ளார்.அதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜேஷ் போரா 156 பந்தில் இரட்டைசதம் அடித்து உள்ளார்.தற்போது மூன்றாவது இடத்தில் பிருத்வி ஷா உள்ளார்.
பிரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 8 மாதம் தடைக்கு பின் தற்போது தான் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…