தடைக்கு பிறகும் களத்தில் வெளுத்து வாங்கிய பிரித்வி ஷா..!
சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் பிரித்வி ஷாவிற்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனையில் பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட இருமல் மாத்திரையை பயன்படுத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக கடந்த ஜூலைமாதம் 16 -ம் தேதி குற்றச்சாற்று முன் வைக்கப்பட்டது. இதனால் பிரித்வி ஷா மார்ச் 16 -ம் தேதி முதல் நவம்பர் 15 -ம் தேதி வரை விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் தடை முடிந்த பிறகு பிரித்வி ஷா தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக களமிங்கினார்.இப்போட்டியில் பிரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
39 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார்.அதில் 7 பவுண்டரி , 2சிக்ஸர் அடங்கும் .இதனால் மும்பை அணி 20ஓவர் முடிவில் 206 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய அசாம் அணி 20ஓவர் முடிவில் 123 ரன் மட்டுமே எடுத்தது.இதனால் மும்பை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.