பாகிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு..!
கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை அணிசுற்று பயணம் செய்து விளையாடினார். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் இறந்தனர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் சர்வதேச போட்டியில் விளையாட மாட்டோம் என மற்ற அணிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி , பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
கராச்சி விமான நிலையத்திற்கு வந்த இலங்கை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதற்கு முன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்ததால் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அளிக்கக்கூடிய பாதுகாப்பை இலங்கை அணி வீரர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் முழு கவனம் செலுத்தி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. பின்னர் அக்டோபர் 5-ம் தேதி டி 20 போட்டி நடைபெற உள்ளது.
பாதுகாப்பு கருதி ஒருநாள் போட்டி கேப்டன் கருணாரத்னே மற்றும் டி 20 போட்டி கேப்டன் மலிங்கா உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் விளையாட மறுத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.