பிரீமியர் லீக் : காயம் கண்ட ‘மிட்ஃபில்டர் ரோட்ரிக்’! மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பின்னடைவா?

மான்செஸ்டர் சிட்டியின் முக்கிய வீரரான ரோட்ரிக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டது.

Rodri

ஸ்பெயின் : கால்பந்து போட்டிக்கான பிரீமியர் லீக் தொடர் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், ஆர்சனல் அணியும் மான்செஸ்டர் சிட்டி அணியும் விளையாடியது. இந்த போட்டியில், மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டர் ரோட்ரிக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டது.

போட்டியில், முதல் பாதியின் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்குக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் காலைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தது கதறினார். அவரை உடனடியாக, மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் களத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய காயம் காரணமாக இந்த சீசனில் தொடர்ந்து நடைபெற உள்ள போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு முக்கியமான காரணமே, அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குக் கண்டிப்பாக அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்பதற்காகத் தான். எனவே, 9 மாதங்கள் அவரால் போட்டிகளில் விளையாடாமல் இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

அவருக்கு காயம் ஏற்பட்டதை அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியீட்டு உறுதி செய்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த போட்டி 2-2 என்ற சமநிலையில் முடிந்தபோதிலும், பிரீமியர் லீக் அட்டவணையில் முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும், வரும் போட்டிகள் முக்கியமான போட்டிகள் என்பதாக மிட்ஃபீல்டர் ரோட்ரி போன்ற முக்கிய வீரர் இல்லாதது அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ரோட்ரி இல்லாதது, இந்த சீசனில் லீக் பட்டத்தை வெல்வதற்கான சிட்டியின் லட்சியங்களுக்கு பெரும், அடியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அணிக்கு முக்கிய வீரராக அவர் திகழ்ந்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்