பிரீமியர் லீக்:மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரொனால்டோ..!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ப்ரேஸ் மற்றும் ப்ரூனோ பெர்னாண்டஸ் மற்றும் ஜெஸ்ஸி லிங்கார்ட் ஆகியோரின் கோல்கள் நியூகேஸ்டில் அணிக்கு எதிராக வெற்றி பெற உதவியது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,முன்னதாக கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,பிரீமியர் லீக் கால்பந்துன் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் நியூகேஸ்டில் அணிகள் மோதிக் கொண்டன.குறிப்பாக,ரொனால்டோ நேற்று நியூகேஸ்டில் அணிக்கெதிராக முதன்முறையாக களம் இறங்கினார்.அதன்படி,தனது முதல் போட்டியிலேயே ரொனால்டோ 45 வது மற்றும் 62 வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.இதனால்,மான்செஸ்டர் யுனைடெட் 4-1 என வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு ரொனால்டோவின் இரண்டு கோல்களே முக்கிய பங்காக அமைந்தது.இதன்மூலம் தனது திறமை இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
GOAL!!!! Cristiano Ronaldo makes it 2 – 1 on for Manchester United on his return to Old Trafford! #GGMU ???????? pic.twitter.com/wntjrA4dyq
— spin (@wavycudder) September 11, 2021
மேலும், ப்ரூனோ பெர்னாண்டஸ் மற்றும் ஜெஸ்ஸி லிங்கார்ட் ஆகியோரின் கோல்கள் ரெட் டெவில்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் வெற்றிபெற உதவியது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025