பாரிஸ் : நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் இன்று 5 பதக்க போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் ஒரு போட்டியாக தற்போது நடைபெற்ற போட்டி தான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு விளையாடிய பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் கலந்து கொண்ட இவர் 2.08 மீ வரை உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். மேலும், இவர் தாண்டிய இந்த தூரம் தான் ஆசியவின் சிறந்த தூரம் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
கடந்த 2021-ல் நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பிரவீன் குமார் 2.07 மீ உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணிக்கு இந்த பாராலிம்பிக் தொடரில் இது 6-வது தங்கப்பதக்கமாகும்.
அதிலும், உயரம் தாண்டுதலில் மட்டுமே சரத் குமார் மற்றும் மாரியப்பன் தங்கவேலுக்கு அடுத்த படியாக பிரவீன் குமார் 3-வது தங்கப்பதக்கமாகும். மேலும், இந்த தொடரில் இந்திய அணி 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
6 பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்கள் கைப்பற்றியதால் பதக்கபட்டியலில் இந்திய அணி 14-வது இடத்தில் வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து, இன்று இரவு 3 பதக்கப் போட்டிகள் இந்திய அணிக்கு நடைபெற உள்ளதால் இன்றைய நாளில் மேலும் 3 பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…