இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரவீன் குமார்! இந்தியாவுக்கு 6-வது தங்க பதக்கம்!

பாராலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

Praveen Kumar

பாரிஸ் : நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் இன்று 5 பதக்க போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் ஒரு போட்டியாக தற்போது நடைபெற்ற போட்டி தான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு விளையாடிய பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் கலந்து கொண்ட இவர் 2.08 மீ வரை உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். மேலும், இவர் தாண்டிய இந்த தூரம் தான் ஆசியவின் சிறந்த தூரம் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

கடந்த 2021-ல் நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பிரவீன் குமார் 2.07 மீ உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணிக்கு இந்த பாராலிம்பிக் தொடரில் இது 6-வது தங்கப்பதக்கமாகும்.

அதிலும், உயரம் தாண்டுதலில் மட்டுமே சரத் குமார் மற்றும் மாரியப்பன் தங்கவேலுக்கு அடுத்த படியாக பிரவீன் குமார் 3-வது தங்கப்பதக்கமாகும். மேலும், இந்த தொடரில் இந்திய அணி 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

6 பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்கள் கைப்பற்றியதால் பதக்கபட்டியலில் இந்திய அணி 14-வது இடத்தில் வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து, இன்று இரவு 3 பதக்கப் போட்டிகள் இந்திய அணிக்கு நடைபெற உள்ளதால் இன்றைய நாளில் மேலும் 3 பதக்கம் வெல்ல  வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்