நார்வே செஸ் : சாம்பியனை அலற விட்ட பிரக்ஞானந்தா..! 3-வது இடத்தில் நீடிப்பு!!
நார்வே செஸ்: நார்வே செஸ் தொடரின், 7-வது சுற்றில் உலக செஸ் சாம்பியனான டிங் லிரினை தோற்கடித்து அசத்தினார் தமிழக இளம் செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா. 6-வது சுற்றின் முடிவில் அலிரேசா ஃபிரோஸ்ஜாவிடம் தோல்வி கண்டு 3-வது இடத்தில் நீடித்து வந்தார்.
அதன்பின் நார்வே செஸ் தொடரில் நடைபெற்ற 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரினை முதலில் நடந்த கிளாசிக்கல் சுற்றில் சமன் செய்து, அதன் பிறகு நடந்த சுற்றில் அவரை தோற்கடித்து 3-வது இடத்திற்கு முன்னேறினார். அதனை தொடர்ந்து நடந்த நார்வே செஸ் தொடரின் 8-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.
முதலில் நடைபெற்ற போட்டியில் இருவரும் சமன் செய்தனர், அதன் பின் நடந்த முடிவு சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், பிரக்ஞானந்தாவை தோற்கடித்து முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா 3-வது இடத்தில் நீடித்து வருகிறார்.