குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை வென்றார் பிரக்ஞானந்தா.!

டாடா ஸ்டீல் செஸ் தொடரில் டை பிரேக்கர் சுற்றில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

tata steel chess - praggnanandhaa

நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர் பிரக்னாநந்தா வெற்றி பெற்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெதர்லாந்தின் Wijk aan Zee இல் நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் 14ஆம் சுற்றில் இருவரும் 8.5 என்ற சம புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் டை பிரேக்கர் நடத்தப்பட்டது.

அதாவது, 14 வீரர்கள் கொண்ட ரவுண்ட்-ராபின் போட்டியில் 13 கிளாசிக்கல் சுற்றுகளுக்குப் பிறகு, குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சமநிலையில் இருந்தனர். குகேஷ், அர்ஜுன் எரிகைசியிடம் 31 நகர்வுகளில் தோல்வியடைந்தார். அதே நேரத்தில், கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கீமருக்கு எதிரான போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியை கண்டார்.

இதனால், மீண்டும் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த டை பிரேக்கர் சுற்றில் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார்.

இதன் மூலம், டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய செஸ் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்த் பெற்றுள்ளார். இவருக்கு முன், சிறந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்த், ஐந்து முறை வென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்