யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியானது விறுவிறுப்பின் உச்சத்தில் நடைபெற்றது.
யூரோ கோப்பை தொடரின் ‘F’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் போர்ச்சுகல் அணியும் செக்கியா (செக் குடியரசு தேசிய கால்பந்து அணி) அணியும் ஜெர்மனியில் உள்ள ரெட் புல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியானது, இந்த யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு முதல் போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோவிற்கு இது 6-வது யூரோ கோப்பை தொடராகும்.
ஒரு வீரராக 6 யூரோ கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். அதனை தொடர்ந்து விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோலை அடிக்க கடுமையாக முயற்ச்சி செய்வார்கள். ஆனால் இரண்டு அணிகளுமே கோல்களை அடிக்க தவறியும், எதிரணியின் கோல்களை தடுத்தும் சிறப்பாக விளையாடினார்கள்.
இதன் காரணமாக முதல் பாதி நிறைவடையும் போது 0-0 என இரண்டு அணிகளுமே கோல் அடிக்காமலே இருந்தனர். ஆனால், இரண்டாம் பாதியானது முதல் பாதிக்கு அப்படியே தலைகீழாகவே தொடங்கியது. விறுவிறுப்பாக தொடங்கிய இரண்டாம் பாதியின் 62’வது நிமிடத்தில் செக்கியா வீரரான லூகாஸ் ப்ரோவோட் முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதன் மூலம் 0-1 என செக்கியா அணி முன்னிலையில் பெற்று வந்தது. அதனை தொடர்ந்து இரு அணிகளும் விளையாட போட்டியின் 69’வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் அடித்த ஒரு ஷாட்டை செக்கியா கோல்கீப்பர் தடுப்பார். அப்போது அந்த பந்து செக்கியா வீரரான ராபின் ஹரானாக் உடம்பில் பட்டு கோலாக மாறிவிடும்.
இதனால் 1-1 என போர்ச்சுகல் அணி சமநிலையில் போட்டியை மாற்றினார்கள். இதனால் மேலும், விறுவிறுப்பாக மாறிய போட்டியானது இறுதி கட்டத்தை நெருங்கியது. அதன்பின் போட்டியின் 90 நிமிடங்கள் நிறைவடைந்ததும் 2 அணிகளும் கோல் அடிக்காமல் திணறுவார்கள். அப்போது களநடுவர்கள் 4 நிமிடங்கள் கூடுதல் நிமிடங்கள் அளிப்பார்கள்.
அப்போது தான் போட்டியின் 90+2 வது நிமிடத்தில் செக்கியா அணி செய்த ஒரு சிறு தவறினால் போர்ச்சுகல் வீரரான கான்சிகாவோ அசத்தலாக கோல் அடித்து போர்ச்சுகல் அணியை த்ரில்லாக வெற்றி பெற வைத்திருப்பர். இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுகல் அணி புள்ளிபட்டியலில் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…