கடைசி நிமிடத்தில் வெற்றியை தட்டி சென்ற போர்ச்சுகல்..! செக்கியாவை வீழ்த்தி 2-1 என த்ரில் வெற்றி ..!

PORvsCZE

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியானது விறுவிறுப்பின் உச்சத்தில் நடைபெற்றது.

யூரோ கோப்பை தொடரின் ‘F’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் போர்ச்சுகல் அணியும் செக்கியா (செக் குடியரசு தேசிய கால்பந்து அணி) அணியும் ஜெர்மனியில் உள்ள ரெட் புல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியானது, இந்த யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு முதல் போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோவிற்கு இது 6-வது யூரோ கோப்பை தொடராகும்.

ஒரு வீரராக 6 யூரோ கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.  அதனை தொடர்ந்து விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோலை அடிக்க கடுமையாக முயற்ச்சி செய்வார்கள். ஆனால் இரண்டு அணிகளுமே கோல்களை அடிக்க தவறியும், எதிரணியின் கோல்களை தடுத்தும் சிறப்பாக விளையாடினார்கள்.

இதன் காரணமாக முதல் பாதி நிறைவடையும் போது 0-0 என இரண்டு அணிகளுமே கோல் அடிக்காமலே இருந்தனர். ஆனால், இரண்டாம் பாதியானது முதல் பாதிக்கு அப்படியே தலைகீழாகவே தொடங்கியது. விறுவிறுப்பாக தொடங்கிய இரண்டாம் பாதியின் 62’வது நிமிடத்தில் செக்கியா வீரரான லூகாஸ் ப்ரோவோட் முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதன் மூலம் 0-1 என செக்கியா அணி  முன்னிலையில் பெற்று வந்தது. அதனை தொடர்ந்து  இரு அணிகளும் விளையாட போட்டியின் 69’வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் அடித்த ஒரு ஷாட்டை செக்கியா கோல்கீப்பர் தடுப்பார். அப்போது அந்த பந்து செக்கியா வீரரான  ராபின் ஹரானாக் உடம்பில் பட்டு கோலாக மாறிவிடும்.

இதனால் 1-1 என போர்ச்சுகல் அணி சமநிலையில் போட்டியை மாற்றினார்கள். இதனால் மேலும், விறுவிறுப்பாக மாறிய போட்டியானது இறுதி கட்டத்தை நெருங்கியது. அதன்பின் போட்டியின் 90 நிமிடங்கள் நிறைவடைந்ததும் 2 அணிகளும் கோல் அடிக்காமல் திணறுவார்கள். அப்போது களநடுவர்கள் 4 நிமிடங்கள் கூடுதல் நிமிடங்கள் அளிப்பார்கள்.

அப்போது தான் போட்டியின் 90+2 வது நிமிடத்தில் செக்கியா அணி செய்த ஒரு சிறு தவறினால் போர்ச்சுகல் வீரரான கான்சிகாவோ அசத்தலாக கோல் அடித்து போர்ச்சுகல் அணியை த்ரில்லாக வெற்றி பெற வைத்திருப்பர். இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுகல் அணி புள்ளிபட்டியலில் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்