2022 உலகக்கோப்பையில் பங்கேற்க போர்ச்சுகல் தகுதி!

ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது போர்ச்சுக்கல்.
2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த நிலையில், வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தி உலககோப்பைக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி. உலக கோப்பையில் 5-ஆவது முறையாக கிறிஸ்டியன் ரொனால்டோ கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025