இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போக்சோ வழக்கு ..!
இந்திய ஹாக்கி அணியில் கடந்த 2017-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த வருண்குமார் அறிமுகமானார். கடந்த 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளியும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்ற இந்திய ஹாக்கி அணியில் ஒருவராக இருந்தார்.
#U19WC2024: அரையிறுதி போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்..!
தற்போது வருண் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபால் வீராங்கனையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக வருண் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் இந்திய ஹாக்கி வீரர் வருண்குமார் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வருண்குமார் அந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அறிமுகமாயிருக்கிறார். திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் பல முறை உறவில் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது எப்.ஐ.ஆரில் கூறுகையில்” முதல் முறையாக கடந்த 2019-ம் ஆண்டு இரவு உணவிற்காக பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் அழைத்து சென்று தன்னுடன் உறவில் இருந்ததாகவும், பின்னர் தொடர்ந்து வருண் கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் உறவிலும் இருந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு என் தந்தை இறந்து விட்டார் அப்போது எங்கள் வீட்டிற்கு அவர் கடைசியாக வந்தார் அதற்கு பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொள்ளவில்லை” என அந்த வீராங்கனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்றதால் ஹாக்கி வீரராக அவரது சிறப்பான விளையாட்டை பாராட்டி ஹிமாச்சல பிரதேச அரசு அவருக்கு ரூ.1 கோடியை அறிவித்தது. கடந்த 2021-ல் அர்ஜுனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.