தற்போது ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது.முதலில் டி20 தொடர்களில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
நேற்று முதல் டி 20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். பிறகு இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 14.3 ஒவேரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியஅணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை பறித்தார்.அதில் ஹாட்ரிக் விக்கெட் அடங்கும்.பின்னர் போட்டி முடிந்த பிறகு செய்தியர்களிடம் பேசிய ஆஷ்டன் அகர் ,இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு நான் ஜடேஜாவிடம் பேசினேன். எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஜடேஜா.அவரை போல நானும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
ஜடேஜா ஒரு ராக் ஸ்டார். அதிரடியாக விளையாடுவார் பந்தை சிறப்பாக சுழலச் செய்வார். என் கூறினார். பிரெட் லீ-க்குப் பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் ஆவார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…