பாரிஸ் ஒலிம்பிக் : பெண்களுக்கான 5000 மீ ஓட்டப்பந்தய போட்டி ..! இந்தியா அணி தோல்வி!

Athelete 500 m

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்சின் தலைநகரமான பாரிசில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய நாளில் மகளீருக்கான 5000மீ ஓட்டப்பந்தய போட்டியானது நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பாருல் சௌத்ரி, அங்கிதா இருவரும் கலந்து கொண்டு விளையாடினார்கள். நடைபெற்ற இந்த போட்டியில் பாருல் சௌத்ரி, 15:10.68 வினாடிகளில் கடந்தார். இது இந்த தொடரில் பாருல் சௌத்ரியின் சிறந்த போட்டி இதுவாகும்.

இருப்பினும் இந்த போட்டியில் அவர் 14வது இடத்தை பிடித்தார். அதே நேரம் மற்றொரு வீராங்கனையான அங்கிதா, 16 விநாடிகளில் பந்தயத்தை முடித்தார். இதன் காரணமாக முதல் 8 இடத்தில் இருக்கும் வீராங்கனைகள் மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இதனால் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது மட்டுமில்லாமல் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர், மேலும் இன்றை நாள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் இறுதி போட்டியில் விளையாடவுள்ளதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்