பாரிஸ் ஒலிம்பிக் : ஒன்றிணைந்த கொரியா நாடுகள் ..! வைரலாகும் வீடியோ ..!

Korean Players Selfie

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் நேற்றைய 5-வது நாளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் கொரியா (வட கொரியா, தென் கொரியா) நாடுகள் கலந்த கொண்டு விளையாடியது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்திருந்தது.

இதனால் 2 நாடுகளுக்கும் இடையே சற்று முட்டலும், முதலுமாக இருந்து வந்தது, இந்நிலையில், நேற்றைய நாளில் இந்த 2 நாடும் டேபிள் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் பதக்கத்திற்க்காக விளையாடினார்கள். இதில் இரண்டு நாட்டு வீரர்களும் சீனாவின் ஒரு ஜோடியை பின்னுக்கு தள்ளி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர்.

ஆனால், சீனாவின் மற்றொரு ஜோடியான வாங் சுகின்-சன் யிங்கா ஜோடி அபாரமாக விளையாடி போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றனர். மேலும், அவரைகளை தொடர்ந்து வடகொரியாவின் ரி ஜாங் சிக் மற்றும் கிம் கும் யோங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது, அதன் பின் தென்கொரியாவின் ஜோடிகளான ஷின் யூ-பின் மற்றும் லிம் ஜாங்-ஹூன் வெண்கல பதக்கம் வென்றனர்.

இந்த போட்டிகள் முடிந்த பிறகு பதக்க மேடையில் அனைவரும் நின்று செல்ஃபி எடுத்து கொண்டனர். இந்த போட்டோவும், இது தொடர்பான வீடியோவும் சமூக தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 3 நாடுகளும் சண்டை இட்டு கொண்டாலும், உலக ஒற்றுமை குறித்து நடத்தப்படும் ஒலிம்பிக் தொடரில் இப்படி வீரர்கள் ஒற்றுமையாக இருப்பது ஒரு புது படத்தை கற்று கொடுப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்