பாரிஸ் ஒலிம்பிக் : பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி ..! ரசிகர்கள் ஏமாற்றம் ..!
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் நேற்றைய 6-வது நாளின் இறுதியில் நடைபெற்ற பேட்மிண்டன் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணியின் சார்பாக பிவி.சிந்து கலந்து கொண்டு விளையாடினார்.
நடைபெற்ற இந்த போட்டியில் சீனாவின் வீராங்கணையான ஹி பிங்க் ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஜியாவோ ஆதிக்கம் செலுத்தினார். இதன் விளைவாக முதல் செட்டை 19-21 என்று இழந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் 14-21 என பிவி.சிந்து தோல்வியடைந்தார்.
இதனால்,காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்ததுடன் தொடரிலிருந்தும் வெளியேறி உள்ளார். இதன் காரணமாக இந்தியாவிற்கு பேட்மிண்டன் போட்டியில் ஒரு பதக்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கனவு தகர்ந்துள்ளது.
ஆனாலும் மறுமுனையில் ஆண்கள் தனி நபருக்கான பிரிவில் இந்தியாவை சேர்ந்த லக்ஷயா சென் ரவுண்டு-ஆஃப் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நாளை (ஆகஸ்ட்-2) நடைபெற இருக்கும் காலிறுதி சுற்றில் லக்ஷயா சென் நாளை தைவான் நாட்டைச் சேர்ந்த சோ டியான் சென் உடன் விளையாடவுள்ளார்.