பாரிஸ் ஒலிம்பிக் : சென் நதி…6 கி.மீ தூரம்… சுமார் 3 மணி நேரம் நடைபெற இருக்கும் தொடக்க விழா ..!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ்சின் தலைநகரமான பாரிஸில் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடக்க விழாவானது பாரீசின் புகழ் பெற்ற சென் நதி கரையில் நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் அனைத்து வீரர்களின் அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பான்ட் டி லெனா பாலத்தில் முடிவடைகிறது.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து நிற்பார்கள். நம் இந்திய அணி சார்பாக டேபிள் டென்னிஸ் வீரரான, தமிழகத்தை சேர்ந்த சரக்கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து என இருவரும் இந்திய அணியை தலைமை தாங்கி இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.
கடைசியாக, பாரிஸ் நகரின் அழகின் உச்சமான ஈபிள் டவரின் எதிரே இருக்கும் டிரோ கேட்ரோ பகுதியில் ஒற்றுமையை குறிக்கும் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து 3 மணி நேரம் களைகட்டும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்த விழாவில் உலக நாடு மக்கள் சுமார் 3 லட்சம் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியையொட்டி பாரீசில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.