பாரிஸ் ஒலிம்பிக் : வரலாற்றில் கால் பதித்த இந்தியா !! டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறி அசத்தல் !
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் தொடரானது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய நாள் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ரவுண்ட்- ஆஃப் 16 போட்டியானது நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக அர்ச்சனா கிரிஷ் காமத், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா விளையாடினார்கள்.
இதில் இதில் இந்திய அணி ரோமானியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ரவுண்ட் ஆஃப் 16 – சுற்று போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் இவ்விரு அணிகளும் இடையே நடைபெறும். அதன்படி, நடைபெற்ற ஐந்து போட்டிகளில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என திரில்லாக ரோமானியாவை வீழ்த்தி கால்இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முதலில், நடைபெற்ற மகளிர் இரட்டையர் போட்டியில் இந்திய அணி 3-0 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த தனிநபர் போட்டியில் இந்திய அணி மீண்டும் 3-0 நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடந்த அடுத்த இரண்டு போட்டிகளிலும் ரோமானிய அணி விட்டதை பிடித்தது. இதன் காரணமாக 2-2 என சமநிலையில் போட்டி சென்றது.
கடைசி போட்டியில் வெற்றி பெறுபவர் கால் எழுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என இக்கட்டான சூழ்நிலை நிலவிய போது, இந்திய அணியின் மணிகா பத்ரா தனது அபார விளையாட்டால் அந்தப் போட்டியை 3-0 என நேர் செட் கணக்கில் த்ரில்லாக வெற்றி பெற்றார். இதனால் 5 போட்டிகளைக் கொண்ட இந்த சுற்றை இந்திய மகளிர் அணி 3-2 என கைப்பற்றி அடுத்த சூற்றான காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்திய அணி முதல் முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் டேபிள் டென்னிஸ் போட்டியில் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, மேலும் இந்த டேபிள் டென்னிஸ் மகளிர் அணி போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.