பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய அணியின் நாளைய போட்டிகள்? பதக்கம் எதிர்பார்க்கலாமா?
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறது, அதில் இந்தியா அணியின் சார்பாக 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேலை இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய அர்ஜுன் பபுதா வெண்கல பதக்கத்தை தவறவிட்டிருந்தார். மேலும், தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியில் நாளை நடக்கவிருக்கும் போட்டிகளின் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
கலப்பு 10மீ ஏர் பிஸ்டல் :
- நாளை மதியம் 1 மணிக்கு 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு வெண்கல பதக்கத்திற்கான போட்டியானது நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் – சிங் சரபோஜ்ட் இருவரும் கொரியாவின் லீ வோன்ஹோ-ஓ யே ஜின் எதிர்த்து விளையாடவுள்ளனர். இந்த போட்டியில் இந்தியா சார்பாக விளையாடும் மனு பாக்கர் பெண்களுக்கான ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த போட்டிக்கு இந்திய ரசிகர்களிடையே 2-வது பதக்கம் கிடைக்குமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹாக்கி :
- நாளை மாலை ஆண்கள் இந்திய அணி, அயர்லாந்து அணியை எதிர்த்து லீக் சுற்றின் 3-வது போட்டியில் விளையாடவுள்ளனர். இந்தியா ஹாக்கி அணி ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 1 ட்ராவுடன் புள்ளிப்பட்டியலில் 3-ஆம் பிடித்துள்ளனர்.
வில்வித்தை :
- நாளை 5:15 மணிக்கு மேல், பெண்களுக்கான தனி நபருக்கான தகுதி சுற்று நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பாக அங்கிதா பங்கட், பஜன் கவுட் தனித்தனியாக விளையாட உள்ளனர்.
- நாளை இரவு 10:45 மணிக்கு ஆண்களுக்கான தனி ப்ரீலிம்ஸ் போட்டியில் இந்திய அணி சார்பாக அமித், ஜாம்பியா நாட்டை சேர்ந்த பேட்ரிக் சின்யெம்பா எதிர்த்து விளையாடவுள்ளார்.
பேட்மிண்டன் :
- நாளை மாலை 5:30 மணிக்கு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் குரூப் ஸ்டேஜ் போட்டியானது நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பாக ரன்கிரெட்டி – ஷெட்டி இருவரும் இந்தோனேஷியா வீரர்களான அல்ஃபியன்-ஆர்டியன்டோ எதிர்த்து விளையாடவுள்ளனர்.
- அதே போல மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் இரட்டையர் குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி சார்பாக க்ராஸ்டோ- பொன்ப்பா இருவரும் ஆஸ்திரேலியா வீராங்கனைகளான மபாசா – யூ வை எதிர்த்து விளையாடவுள்ளனர்.
குத்துச்சண்டை :
- நாளை இரவு 7 மணிக்கு பெண்களுக்கான 57’கிலோ குத்துச் சண்டை ப்ரீலிம்ஸ் போட்டியில் இந்தியா அணி சார்பாக ஜெய்ஸ்மின், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நெஸ்தி பெட்சியோவை எதிர்த்து விளையாடவுள்ளார்.