பாரிஸ் ஒலிம்பிக் : தடை செய்யப்பட்ட நாட்டிற்கு தங்கப்பதக்கம் ..! எப்படி தெரியுமா?

பாரிஸ் : இந்த ஆண்டிற்கான சம்மர் ஒலிம்பிக் போட்டிகளானது பிரான்சில் உள்ள பாரிசில் கடந்த ஜூலை-26 தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரில், போட்டிகள் தொடங்குவதற்கு முன் ஒரு சில காரணங்களுக்காக சில நாடுகளுக்கு தடை விதிப்பது வழக்கம் தான்.
அதே போல இந்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு முன் ரஷியா மற்றும் பெலருஸ் எனும் 2 நாடுகளுக்கு சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்திருந்தது. அதற்கு காரணம் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தான். ஒலிம்பிக் தொடர் தொடங்குவதற்கு முன்னரே இதனை நிறுத்த சொல்லி ஒலிம்பிக் கமிட்டி கூறியும் போரை நிறுத்தத்தால் தடை விதித்தனர்.
மேலும், அந்த போருக்கு உதவி செய்ததன் காரணமாக பெலருஸ் நாட்டையும் தடை விதித்தனர். இதே போல 2016-ம் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ரஷியா நாட்டை தடை விதித்திருந்தனர். 2010-ம் ஆண்டு குவைத் மற்றும் 2000-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் என தடைவித்திருந்தனர். ஆனால் இந்த ஒலிம்பிக்கில் தடை செய்யப்பட்ட நாடான பெலாரூஸில் இருந்து 3 பதக்கங்களை வென்றுள்ளனர். அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.
அதே சாத்தியம் தான் நாடுகள் செய்த சில தவறால் தடை விதித்தாலும், அந்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாட விருப்பம் உள்ளதால் கலந்து கொள்வதற்கு வேறு ஒரு வழியில் ஒலிம்பிக் கமிட்டி வாய்ப்பும் கொடுக்கிறார்கள். அது என்னவென்றால் தடை செய்யப்பட்ட நாட்டிலிருந்து விளையாட வரும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது நாடு சார்பாக இல்லாமல் தனியாக அதாவது தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்கள் (Individual Neutral Athletes) எனும் பிரிவின் கீழ் தங்களது பெயர்களை பதிவு செய்து விளையாடலாம்.
அப்படி பெலரூஸ் நாட்டிலிருந்து வந்து விளையாடிய 3 வீரர்கள் தற்போது பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மட்டும் இவான் லிட்வினோவிச் எனும் வீரர் தங்கப்பதக்கமும் மற்றும் வியாலேதா பார்ட்ஜிலோஸ்காயா எனும் வீராங்கனை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
மேலும், யௌஹேனி ஜலட்டி எனும் வீரர் படகோட்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தி இருக்கிறார். இந்த ஒலிம்பிக்கில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களில் நடைபெற்றுள்ளது அதில் ஒரு சுவாரஸ்யமான விஷியமாக இதுவும் பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025