பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய ஜோடி விளையாடிய பேட்மிண்டன் போட்டி ரத்து ..!

Satwiksairaj Rankireddy and Chirag Shetty

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஒலிம்பிக் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் ஆண்கள் பிரிவுக்கான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஜெர்மனி வீரர்கள் இடையே பேட்மிண்டன் போட்டி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், எதிரணியான ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்கள். இதனால், நடைபெற இருந்த அந்த போட்டி ரத்தானது. இதன் காரணமாக குரூப் C பிரிவில் உள்ள 4 அணிகளில் ஜெர்மனி விலகியதை தொடர்ந்து காலிறுதிக்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன.

அதில் இந்திய வீரர்கள் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் காலிறுதி வாய்ப்பிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் மறுபக்கம் பெண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா- தனிஷா கிராஸ்டோ ஜோடி ஜப்பான் வீராங்கனைகளான சிஹாரு ஷிடா -நமி மாட்சுயாமா ஜோடியுடன் மோதினர்கள்.

நடைபெற்ற அந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் அணி வீராங்கனைகள் 21- 11, 21-12 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்