பாரிஸ் ஒலிம்பிக் : இந்தியவுக்கு 2-வது வெண்கல பதக்கம் ..! வரலாறு படைத்த மனு பாக்கர் ..!
பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் 4-வது நாளான இன்று பல போட்டிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணிக்கு 10மீ. ஏர் பிஸ்டல் கலப்பு அதாவது இரட்டையர் பிரிவு, போட்டியில் இறுதி சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மனு பாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடி இந்திய அணி சார்பாக கலந்த கொண்டனர்.
நடைபெற்ற இந்த இறுதி சுற்றில் இந்திய அணி 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. இன்றைய நாளில் இந்தியா அணியில் பதக்க போட்டியாக இந்த 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டி மட்டுமே நடைபெற இருந்தது. இதனால், இந்தியாவிற்கு 2-வது தங்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்ட்டது.
அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவுக்கு தற்போது 2-வது வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் மனு பாக்கர் தனி நபர் பிரிவில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் 2-வது பதக்கத்தை வென்று அசத்தி இருக்கிறார். மேலும், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற புதிய வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்துள்ளார்.
BRONZE MEDAL!!!!!
Incredible shooting from Manu Bhaker and Sarabjot Singh to win us our Second medal at @paris2024 Olympic Games. With this Manu also becomes the first Indian athlete to win 2 Olympic Medals in a single edition! #JeetKaJashn | #Cheer4Bharat | #IndiaAtParis24 pic.twitter.com/C6rIy3hNIj— Team India (@WeAreTeamIndia) July 30, 2024