பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் : ஷாக்கிங் நியூஸ் .! தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகட் !!

Vinesh Phogat

பாரிஸ் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் தற்போது 33-வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணி இது வரை 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மகளீருக்கான 50கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகட் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தற்போது இறுதி போட்டி வரை வந்திருந்தார்.

நேற்று மல்யுத்த அரையிறுதி சுற்றில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில் அமெரிக்க வீராங்கனையுடன் இன்று இறுதி போட்டியில் மோதவிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் அந்த இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கி எடை பிரிவுக்கான போட்டியில் அவரது எடை 100 கிராம் அதிகம் உள்ளதால் அதாவது 50.100 கிராம் உள்ளதன் காரணமாக அவரை இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி.  இந்த தகுதி நீக்கத்தில் சந்தேகம் இருப்பதாக பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு கண்டிப்பாக இந்த மல்யுத்த போட்டியில் தங்கம் அல்லது ஒரு வெள்ளி பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த இந்திய ரசிகர்கள் இந்த செய்தி ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  1 கிலோ கூட அதிகம் இல்லை வெறும் 100கிராம் எடை அதிகம் இருந்தன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இதனை எந்த ரசிகர்களாலும் ஏற்று கொள்ள முடியாத வண்ணம் உள்ளது.

மேலும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பதக்க கனவு பறிபோனதென்றே கூறலாம். தற்போது, மல்யுத்த இறுதி போட்டியானது நடைபெறாததால் தங்கப் பதக்கம் அமெரிக்கா வீராங்கணைக்கு அளிப்பார்கள் எனவும், அதே போல வெள்ளிப் பதக்கம் யாருக்கும் அளிக்கப்படாது எனவும், வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெறும் எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்