பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : ‘ஒரே வாய்ப்பு தான்’ ! ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா செய்த புதிய சாதனை!
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஈட்டி எறிதல் போட்டியானது இன்று நடைபெற்றது. ஏனெனில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொள்வார் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு என்பது இருந்து வந்தது.
இந்நிலையில், அதற்கான தகுதி சுற்றுப் போட்டியானது இன்று நடைபெற்றது. 32 வீரர்கள் பங்கேற்று விளையாடும் இந்த தகுதி சுற்று 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 32 வீரர்களும் இரண்டு பிரிவுகளாக (A&B) பிரிக்கப்பட்டு விளையாடுவார்கள்.
இந்த தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் 6 முறை வாய்ப்பளிக்கப்படும். இதில் யார் அதிக தூரத்தில் ஈட்டியை எறிகிறார்களோ அவர்களே தகுதி பெறுவார்கள் அதிலும் குறிப்பாக 84 மீட்டர் அல்லது அதற்கு மேல் ஈட்டி எறிந்தால் மட்டுமே தகுதி பெற முடியும்.
இந்நிலையில், 2-வது பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு ஈட்டியை வீசினார். அதில் முதல் வாய்ப்பிலேயே அவர் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நேராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் இதுவரை யாரும் இந்த தூரத்தில் ஈட்டி எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தகுதி சுற்றில் அதிக தூரம் ஈட்டியை எரிந்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் எறிந்த தூரமே இந்த தகுதி சுற்றில் அதிகமான தூரமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியானது வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று இரவு 11.55 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். அப்போது இவர் எறிந்த ஈட்டியின் தூரம் 87.58 மீட்டர் தூரம் ஆகும். இதனால், கடந்த ஆண்டில் தங்கம் வென்று கொடுத்த அந்த மீட்டரை விட தற்போது தகுதி சுற்றில் அவர் எறிந்த தூரம் அதிகமாக இருப்பதால் இந்த ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.