சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.
மாற்று திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 100 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த பாராலிம்பிக்ஸ்ஸின் 6-வது நாளான நேற்றைய நாளில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் வீரரான சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் குண்டை எரிந்து புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆசிய அளவில் இந்த தூரத்திற்கு யாரும் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்த சாதனையை படைத்ததுடன் குண்டெறிதல் போட்டியில் தங்கத்தையும் தட்டி தூக்கினார். இதற்கு முன்பு இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக பாரா போட்டியில் 16.21 மீட்டர் தூரம் வீசியதே ஆசிய சாதனையாக இருந்தது.
தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஈட்டி எறிதல் F64 போட்டியில் இந்தியா வீரரான சுமித் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். அதே ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். அதை தொடர்ந்து பெண்களுக்கான கிளப் த்ரோ போட்டியில் காஷிஷ் லக்ரா வெள்ளிப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றினார். அதே நேரத்தில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
இப்படி மொத்தம் இந்தியா 12 பதக்கங்கள் வென்றுள்ளது. அதில் 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம் மற்றும் 3 வெண்கலப்பதக்கமும் உள்ளது. 12 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலிலும் 3 -வது இடத்தில் உள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் இந்தியா மொத்தம் 10 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதனை முந்தி புதிய வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி உள்ளது.
இதை தவிர மேலும், 2 தங்கப்பதக்கங்களை இந்தியா அணி வெல்லும் எனவும், மொத்த பதக்கங்கள் 15-ஆக உயரலாம் எனவும் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளர் சத்யநாராயணண் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…