பாராலிம்பிக் : 6-ஆம் நாள் போட்டிகள்! இந்தியாவின் இன்றைய பதக்கப் போட்டிகள்!
பாராலிம்பிக் தொடரின் 6-ஆம் நாளான இன்று இந்திய அணி வீரர்கள் மொத்தம் 5 பதக்கப்போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
பாரிஸ் : மாற்றுதிறனாளிகளுக்காக பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை மொத்தம் 15 பதக்கங்களை (3 தங்கம், 5வெள்ளி, 7 வெண்கலம்) வென்று பதக்கபட்டியலில் 15-வது இடத்தில் இருந்து வருகிறது. அதில், நேற்று மட்டுமே இந்திய அணி மொத்தமாக 7 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி இன்று அதிகப்போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் முக்கியமாக 5 பதக்கப்போட்டிகளில் கலந்து கொள்கிறது. இதனால், இன்றைய நாளும் இந்தியாவுக்கு 3 பதக்கமாவது கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றையப் பதக்கப்போட்டிகள் :
- பகல் 02:28 மணி – பாரா தடகளம் – பெண்கள் ஷாட் புட் – இறுதி போட்டி- பாக்யஸ்ரீ ஜாதவ்
- இரவு 07:30 மணி – பாரா துப்பாக்கி சுடுதல் – பெண்கள் 50 மீ. ரைபிள் 3 நிலைகள் இறுதி போட்டி – மோனா அகர்வால், அவனி லெகாரா
- இரவு 10:38 மணி – பாரா தடகளம் – பெண்கள் 400 மீ. – இறுதிப் போட்டி – தீப்தி ஜீவன்ஜி
- இரவு 11:50 மணி – பாரா தடகளம் – ஆண்கள் உயரம் தாண்டுதல் – இறுதி போட்டி – மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், ஷைலேஷ் குமார்
- இரவு 12:13 மணி – பாரா தடகளம் – ஆண்கள் ஈட்டி எறிதல் – இறுதிப் போட்டி – அஜீத் சிங், ரிங்கு, சுந்தர் சிங் குர்ஜார்.
இதில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு மீது மிகுந்த எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. மேலும், பெண்களுக்கான 400 மீ. ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்து கொள்ளும் தீப்தி ஜீவன்ஜி மீதும் அதிக எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது.