பாராலிம்பிக்ஸ் 10-ஆம் நாள்! இந்திய அணியின் இன்றைய பதக்கப் போட்டிகள்!

நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இன்றைய மொத்தம் 6 பதக்க போட்டிகளில் விளையாடவுள்ளது.

India Paralympic

பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் முடிவடையும் நாளை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி 6 தங்க பதக்கம், 9 வெள்ளி பதக்கம், 12 வெண்கல பதக்கம் என மொத்தம் 27 பதக்கங்கள் வென்றுள்ளது. மேலும், பதக்கபட்டியலில் 17-வது இடத்திலும் இருந்து வருகிறது.

பாராலிம்பிக் 2024-ல் தொடரில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறது. இன்னும் 2 நாட்களே இருப்பதால் இந்திய அணி 30 பதக்கங்களுக்கு மேலும் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இன்றைய நாள் இந்திய அணி இன்று 6 பதக்கப்போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதில் குறைந்தது 4 முதல் 5 பதக்கங்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பதக்க போட்டிகள் :

பாரா கேனோ :

  • பகல் 02:50 மணி- யாஷ் குமார் – ஆண்களுக்கான ஒற்றையர் 200 மீட்டர் – இறுதி போட்டி
  • பகல் 03:14 மணி – பிராச்சி யாதவ் – பெண்களுக்கான ஒற்றையர் 200 மீட்டர் – இறுதிப் போட்டி

பாரா நீச்சல் :

  • இரவு 10:00 மணி – சுயாஷ் நாராயண் ஜாதவ் – ஆண்களுக்கான 50 மீ. பட்டர்பிளை – இறுதிப் போட்டி

பாரா தடகளம் :

  • இரவு 10:30 மணி – நவ்தீப் – ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – இறுதிப் போட்டி
  • இரவு 11:03 மணி – சிம்ரன் – பெண்கள் 200 மீ. ஓட்டப்பந்தயம் – இறுதிப் போட்டி
  • இரவு 12:29 மணி (செப்டம்பர் 10) – திலீப் மஹது காவிட் – ஆண்களுக்கான  400மீ. ஓட்டப்பந்தயம் – இறுதிப் போட்டி

இந்திய அணியின் இன்றைய பிற போட்டிகள்

  • பகல் 1:00 மணி – அர்ஷத் ஷேக் – ஆண்களுக்கான பாரா சைக்கிள் ஓட்டுதல் சாலை பந்தயம்.
  • பகல் 01:05 மணி – ஜோதி கதேரியா – பெண்களுக்கான பாரா சைக்கிள் ஓட்டுதல் சாலைப் பந்தயம்
  • பகல் 01:30 மணி – யாஷ் குமார் – பாரா கேனோ – ஆங்களுக்கான கயாக் ஒற்றையர் 200 மீ. – அரை இறுதிப் போட்டி
  • பகல் 01:55 மணி – சுயாஷ் நாராயண் ஜாதவ் – பாரா நீச்சல் – ஆண்கள் 50 மீ. பட்டர்பிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்