பாராலிம்பிக் இந்திய அணி : நேற்றைய பதக்கங்கள்! இன்றைய போட்டிகள்!
பாராலிம்பிக் தொடரில் 24 பதக்கங்களுடன் இந்தியா அணி பதக்கபட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7-ஆம் நாள் போட்டிகளில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்ள் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மேலும், ஒட்டுமொத்தமாக இந்திய அணி இதுவரை 5 தங்கப் பதக்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 24 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 13-வது இடத்தில் இருந்து வருகிறது.
நேற்று வென்ற பதக்கங்கள்
கிளப் த்ரோ :
- ஆண்களுக்கான கிளப் த்ரோ பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீரரான 34.92 மீட்டர் தூரத்திற்கு பந்தினை தூக்கி எறிந்து தரம்பீர் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும், கிளப் த்ரோ போட்டியில் ஆசிய அளவிலான புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
- மேலும், அதே போட்டியில் சக இந்திய வீரரான பிரனவ் சர்மா 34.59 மீ. தூரத்திற்கு பந்தினை வீசி வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றார்.
வில்வித்தை :
- ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் என 2 போட்டிகளை சேர்த்தும் கூட இந்தியர் ஒருவர் வில்வித்தை பிர்வில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
குண்டு எறிதல் :
- ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய சச்சின் சர்ஜேராவ் 16.32 மீ. தூரம் வரை குண்டை எறிந்து வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
இன்றைய பதக்க போட்டிகள்
பாரா ஷூட்டிங் :
- பிற்பகல் 3:15 மணி – 50மீ. ஷூட்டிங் (கலப்பு) இறுதி போட்டி- சித்தரதா பாபு, மோனா அகர்வால்
பாரா ஜூடோ :
- இரவு 7:30 மணி – ஆண்களுக்கான -60 கி. கடைசி பிளாக் போட்டி – கபில் பர்மர் .
- இரவு 7:30- பெண்களுக்கான 48 கி. கடைசி பிளாக் போட்டி – கோகிலா.