பாராலிம்பிக் 2024 : தடகள போட்டியில் “வெண்கலம்” வென்றார் ப்ரீத்தி பால்!
பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில், தடகள போட்டியில் இந்திய அணியின் சார்பாக “வெண்கலம்” வென்று அசத்தி இருக்கிறார் ப்ரீத்தி பால்.
பாரிஸ் நகரில் மாற்றுத் திறனாளிக்கான17-வது பாராலிம்பிக் தொடரானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின், மகளீருக்கான 100 மீ ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய ப்ரீத்தி பால் 3-ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம், அவர் வெண்கல பதக்கத்தை முத்தமிட்டுள்ளார். மேலும், பாராலிம்பிக் 2024 தொடரில் தடகள போட்டியில் இந்திய அணி தனது முதல் வெண்கல பதக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இதனால், ஒரே நாளில் இந்திய அணி 3 பதக்கங்களை (1 தங்கம், 2 வெண்கலம்) அடுத்தடுத்து வென்று அசத்தி இருக்கிறது.
இதற்கு முன் நடைபெற்ற 10.மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்தியா அணி சார்பாக விளையாடிய அவனி லெகரா தங்கப்பதக்கமும், மோனா அகர்வால் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். தற்போது நடைபெற்ற இந்த 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் 14.21 நொடிகளில் ஓடி 3-ஆம் பிடித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் அவரது சொந்த சாதனையையும் முறியடித்து பாராலிம்பிக்கில் அவரது “பெஸ்ட்டை” பதிவு செய்துள்ளார். பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில், தடகள போட்டியில் முதல் பதக்கத்தை வென்ற ப்ரீத்தி பாலுக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.