பாராலிம்பிக் 2024 : இந்தியா அணியின் 7-ஆம் நாள் பதக்கப் போட்டிகள்!
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் 6-ஆம் நாள் முடிவில் இந்திய அணி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
பாரிஸ் : பாராலிம்பிக் தொடரின் 7-ஆம் நாள் போட்டிகள் இன்று நடைபெற இருக்கிறது. இந்த நாளில் இந்திய அணி 11 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆனால், அதில் மொத்தம் 7 பதக்கப் போட்டிகளில் இந்திய அணி குறிவைத்துள்ளது.
இந்திய அணியின் புதிய சாதனை :
இதுவரை நடைபெற்ற பாராலிம்பிக் 2024 தொடரில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 19-வது இடத்தில் வகித்து வருகிறது.
கடந்த, 2020ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் 19 பதக்கங்களை வென்றிருந்தே ஒரு தொடரில் இந்தியா அணி கைப்பற்றிய அதிக பதக்கங்களாகும். ஆனால், நேற்றைய 6- ஆம் நாள் முடிவிலே அந்த சாதனையை முறியடித்து இந்திய அணி 20 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட்-28ம் தேதி தொடங்கிய இந்த பாராலிம்பிக் தொடரின் முதல் நாளிலிருந்தே கலந்து கொண்டு விளையாடிய இந்திய அணி வீரர்கள் பதக்கத்தை குறிவைத்தே விளையாடினார்கள். அதன்படி, ஒவ்வொரு நாளும் இந்திய அணி 3 முதல் 7 பதக்கங்கள் வென்று அசத்தினார்கள். இது, இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு ஒரு பெரிய உந்துதலாக அமைந்தது.
இன்றைய பதக்கப் போட்டிகள் :
சைக்கிளிங் :
- பகல் 11.57 மணி – ஆண்கள் தனிநபர் போட்டி (பதக்க சுற்று) – அர்ஷத் ஷேக்
- மதியம் 12.32 மணி – பெண்களுக்கான தனிநபர் போட்டி (பதக்க சுற்று) – ஜோதி கதேரியா
குண்டு எறிதல் :
- பிற்பகல் 3.15 மணி – பெண்களுக்கான (பதக்க சுற்று) – அமிஷா ராவத்
- இரவு 10.50 மணி – ஆண்களுக்கான (பதக்க சுற்று) – தரம்பிர், பிரணவ் சூர்மா மற்றும் அமித் குமார் சரோஹா.
பளுதூக்குதல் :
- பிற்பகல் 3.30 மணி – ஆண்களுக்கான 49 கிலோ பிரிவு (பதக்க சுற்று) – பர்ம்ஜீத் குமார்
- இரவு 8.30 மணி – பெண்களுக்கான 45 கிலோ பிரிவு (பதக்கம் சுற்று) – சகினா காதுன்
ஈட்டி எறிதல் :
- இரவு 10.50 மணி – ஆண்களுக்கான போட்டி (பதக்கம் சுற்று) – தரம்பிர், பிரணவ் சூர்மா மற்றும் அமித் குமார் சரோஹா