பாராலிம்பிக் ஏர் ரைபிள்;இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி..!
பாராலிம்பிக் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து,உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்றார்.அதன்பின்னர், ஆண்களுக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் வினோத் குமார் பங்கேற்று அதிகபட்சமான 19.91 மீட்டர் தூரத்துடன் எறிந்து வெண்கலம் வென்றார்.
இதனையடுத்து,இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கமும்,வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கமும் பெற்ற நிலையில்,ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 இறுதிப் போட்டியில்,தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும்,சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலமும் வென்று சாதனை புரிந்துள்ளனர்.இதனால்,தற்போது இந்தியா 7 பதக்கங்களை வென்று பாராலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனை பெற்றுள்ளது.
இந்நிலையில்,பாராலிம்பிக் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் 615.2 மதிப்பெண்களுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.இதனால்,இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் அவர் ஏதேனும் ஒரு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Finding his aim with surgical precision ????????#IND‘s Swaroop Unhalkar books passage to the final of Men’s 10m Air Rifle Standing SH1 with a score of 615.2 and will now compete for a medal! ????????????#Tokyo2020 #Paralympics #ShootingParaSport @swaroopunhalkar
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 30, 2021