பாரா ஆசிய விளையாட்டு : ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.!
சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 6வது நாளான இன்றைய நாள் துவக்கமே தங்க பதக்கத்துடன் இந்தியா ஆரம்பித்துள்ளது. பதக்க வேட்டையை நேற்று 99 பதக்கத்துடன் முடித்துக்கொண்ட இந்தியா இன்று 100வது பதக்கத்தை தாண்டியுள்ளது.
இன்றைய ஆண்களுக்கான 400 மீ ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் மஹது காவிட் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மொத்தம் 26 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. திலீப் மஹது கவித் 400மீ தூரத்தை 49.48 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றார்.
பாரா ஆசிய விளையாட்டு – இன்று 4வது தங்கம், 3 வெண்கலம், 4 வெள்ளி.. பதக்க வேட்டையில் இந்தியா!
இதுவரை பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 31 வெள்ளி பதக்கம், 47 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 104 பதக்கங்களை வென்றுள்ளது. 100 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது பாராட்டை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, 1,500 மீட்டர் ஒட்டப்பந்தியத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கப்பதக்கம் வென்று இருந்தார். ஆடவருக்கான 1,500 மீட்டர் தூரத்தை 4:20:80 நிமிடங்களில் கடந்து ராமன் சர்மா தங்கப் பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.